ராமநாதபுரம் சேதுபதி மன்னர் ராஜகுமாரன் சேதுபதி மாரடைப்பால் காலமான நிலையில் அவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மறைந்த மன்னர் ராஜகுமாரன் சேதுபதி தமிழ் நடிகர் ஒருவரின் நெருங்கிய உறவினர் என்பது தற்போது வெளிவந்துள்ளது
அஜித், விஜய், சூர்யா உள்பட பல பிரபல நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் பிரேம். இவர் ‘விக்ரம் வேதா’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் என்பதும் இந்த படத்தில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் சற்று முன்னர் இவர் தனது சமூக வலைத்தளத்தில் ’எனது மாமன் மகனான ராமநாதபுரம் மன்னர் திரு குமரன் சேதுபதி அவர்கள் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகர் பிரேம் பதிவு செய்துள்ளார்
இந்த பதிவை பார்த்தவுடன் தா நடிகர் பிரேம், ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு உறவினர் என்பது பலருக்கு தெரிய வந்ததால் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.