Saturday, July 2, 2022
Homeசினிமா செய்திகள்Tamil director and actor confirm to join in Ajith 61 movie -...

Tamil director and actor confirm to join in Ajith 61 movie – தமிழ் News

அஜித் நடித்து வரும் ’அஜீத் 61’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. எச். வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் இதுவொரு வங்கி கொள்ளை குறித்த கதையம்சம் கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது.


 
மேலும் இந்த படத்தில் சமீபத்தில் நடிகை மஞ்சுவாரியர் மற்றும் ஜான் கொகைன் ஆகியோர் இணைந்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது தமிழ் திரையுலகில் இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் இணைந்து உள்ளதாக நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’அஜீத் 61’ திரைப்படம் அற்புதமான படம் என்றும், அதில் ஒரு நல்ல கேரக்டர் எனக்கு கிடைத்துள்ளது என்றும் நல்ல தளம் கிடைத்து உள்ளது என்றும் அதை 100% கடுமையாக உழைத்து அந்த படைப்புக்குள் நானும் இருக்கிறேன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து மஞ்சு வாரியர், ஜான் கொகைனை அடுத்து சமுத்திரக்கனியும் இந்த படத்தில் நடித்து வருகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments