Thursday, June 30, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்Tamil Nadu Govt: வாகனத்தில் 'G' அல்லது 'அ' பயன்படுத்தினால் நடவடிக்கை - தமிழக அரசு...

Tamil Nadu Govt: வாகனத்தில் ‘G’ அல்லது ‘அ’ பயன்படுத்தினால் நடவடிக்கை – தமிழக அரசு வார்னிங்! – tamil nadu govt warns g mark should be used only for state government owned vehicles

அரசு வாகனங்களை தவிர மற்ற அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் வாகனங்களில் G அல்லது என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
அரசு வாகனம் அல்லாத வாகனங்களில் தற்பொழுது தமிழகமெங்கும் பதிவெண் பலகையில் (Number Plate) G அல்லது அ என்ற எழத்துக்கள் எழுதப்பட்டோ அல்லது Sticker ஒட்டப்பட்டோ மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 3 உட்பிரிவு (K) -ன் படி அரசு வாகனம் என்றால் தமிழக அரசின் வாகனங்கள் மட்டுமே. அரசு வாகனங்களுக்கு வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு உள்ளது. எனவே உரிய வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு பெற்ற தமிழக அரசின் வாகனங்களில் மட்டுமே G அல்லது அ என்ற எழுத்துக்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் – மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் அட்வைஸ்!
எனவே, தமிழ்நாடு அரசு வாகனங்களை தவிர மற்ற அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் வாகனங்களில் G அல்லது அ என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments