கொரோனா தொற்று தமிழகத்தில் 50க்கும் கீழ் தான் உள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டரை மாதத்தில் கொரோனாவிற்கு உயாிழப்பு எதுவுமில்லை. அரசு நிதிநிலை அறிக்கையில் கூறியவாறு 4,000க்கும் மேற்பட்ட காலிபணியுடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்க பட்டு வருகிறது. செவிலியர்கள் 4,448 பேர், சுகாதார பணியாளர்கள் 2,448பேர் என மொத்தம் 7,296 பேர் நியமிக்க பட்டுள்ளனர். ஏற்கனவே இருந்த ஊதியத்தை விட செவிலியர்களுக்கு ரூ.4,000, சுகாதார பணியாளர்களுக்கு ரூ.3,000 உயர்த்தப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் இன்று முதல் கட்டாயம்…
பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக சொல்லி இருந்த தேர்தல் வாக்குறுதியை 72 மணி நேரத்தில் நிறைவேற்றவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தது குறித்து அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர், பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது மத்திய அரசு, குறைக்க வேண்டியது மாநில அரசா என்று அனைத்து மாநிலங்களும் விமர்சனம் செய்து வருகிறது. இதையும் அண்ணாமலை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.
செய்தியாளர் – பி. முரளி கணேஷ், தூத்துக்குடி
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.