Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்'The Flash' படத்தின் ஹீரோ எஸ்ரா மில்லர் கைது; பின்னணி இதுதான்!| 'The Flash' star...

‘The Flash’ படத்தின் ஹீரோ எஸ்ரா மில்லர் கைது; பின்னணி இதுதான்!| ‘The Flash’ star Ezra Miller arrested after Hawaii karaoke incident

‘Suicide Squad’, ‘Justice League’, ‘Fantastic Beasts’, ‘The Secrets of Dumbledore’ போன்ற பிரபல படங்களில் நடித்த ‘எஸ்ரா மில்லர் (Ezra Miller)’ தற்போது ‘வார்னர் ப்ரோஸ்’ தயாரிப்பில் ‘தி பிளாஷ் (The Flash)’ எனும் படத்தில் நடித்துவருகிறார். இப்படம் வரும் 2023-ல் ஜூன் 23-ல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும், இவர் நடித்த ‘The Secrets of Dumbledore’ படம் மார்ச் 15-ல் வெளியாக உள்ளது. இந்நிலையில் இவர் அமெரிக்காவில் உள்ள ஹவாய் (Hawaii) மாநிலத்தில் உள்ள மதுபான விடுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

எஸ்ரா மில்லர்

எஸ்ரா மில்லர்

இவர் சென்றிருந்த மதுபான விடுதியில் இருந்த அனைவரும் பாடல் பாடிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது மில்லர் ஆபாச வார்த்தைகள் பேசிக் கத்தியதாகவும், கிளர்ச்சியடைந்து அங்கிருந்தவர்களைத் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரை அங்கிருந்த காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுபற்றிக் கூறிய காவல் துறையினர், ‘மில்லர் ஆபாசமாகக் கத்தத் தொடங்கினார், ஒரு கட்டத்தில் கரோக்கி பாடல் பாடும் 23 வயதுப் பெண்ணிடமிருந்து மைக்ரோபோனைப் பிடுங்கினார், பின்னர் 32 வயது கொண்ட ஒருவரைத் துன்புறுத்தித் தாக்கி, பாடிக்கொண்டிருந்தார். பின்னர் அங்கிருந்த பார் உரிமையாளர் மில்லரை அமைதிப்படுத்த பலமுறை கேட்டுக்கொண்டார், பலனில்லை’ என்று காவல்துறை கூறினார்கள். கைது செய்யப்பட்ட மில்லர் தற்போது 500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments