Thoothukudi mother transformed into male for daughter |30 ஆண்டுகளாக ஆணாக வேடமிட்டு வாழும் பெண்ணின் நெகிழ வைக்கும் கதை

தூத்துக்குடி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மாஸ்டர் . முத்து என்றவுடன் ஆண் என்று நினைத்து விடாதீர்கள். சட்டை, வேட்டி அணிந்து ஆண் ரூபத்தில் இருக்கும் இவர் ஒரு பெண். 57 வயதை பூர்த்தி செய்த முத்து மாஸ்டருக்கு அவரது தாய் வைத்த பெயர் பேச்சியம்மாள். ஆனால் பேச்சியம்மாள் என்று சொன்னால் யாருக்கும் அடையாளம் தெரியாது. பேச்சியம்மாளின் வாழ்க்கையில் இப்படியொரு மாற்றம் ஏன் ? எப்படி வந்தது ? என்ற கேள்விக்கு விடைதேட…. அதற்கான பதில் அவரிடம் இருந்தே கிடைத்தது.

30 ஆண்டுகளாக ஆணாக வேடமிட்டு வாழும் பெண்,ஆணாக வேடமிட்டு வாழும் பெண்

பேச்சியம்மாளுக்கு 20 வயதில் திருமணம் முடிந்தது. தாலி கட்டிய 15வது நாளில் அவரது வாழ்க்கையே முடிந்தது. ஆம், மாரடைப்பு ஏற்பட்டு பேச்சியம்மாளின் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். கணவரை இழந்தபிறகு, என்ன செய்வதென்று கூட சிந்திக்க முடியாத பக்குவமே அப்போது அவருக்கு இருந்தது. இதற்கிடையே பேச்சியம்மாளுக்கு இன்னொரு உலகம் காத்துக் கிடந்தது. 10 மாதத்தில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்திருந்தார். அதை ஆசை ஆசையாய் தொட்டு தூக்கியவர் அடுத்தகட்ட வாழ்க்கைக்குள் பெரும் கனவோடு அடியெடுத்து வைத்தார். 6 மாதமாக குழந்தையை கவனித்தவர் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தார். அக்காள் வீட்டில் பிள்ளையை விட்டுவிட்டு தூத்துக்குடி நகரத்திற்கு வேலைதேடிச் சென்றார். மடத்தூர் அருகே உள்ள கரி ஆலையில் வேலையும் கிடைத்தது. வாடகைக்கு வீடு எடுத்து இரவு,பகல் பாராது உழைத்து பணம் சேர்க்க ஆரம்பித்தார். அப்போது இன்னொரு பேரிடி விழுந்தது பேச்சியம்மாளின் வாழ்க்கையில்.

30 ஆண்டுகளாக ஆணாக வேடமிட்டு வாழும் பெண்,ஆணாக வேடமிட்டு வாழும் பெண்

பெண் ஒருத்தி தனியாக இருந்தால் என்ன நடக்கும். அதேதான் பேச்சியம்மாளின் பாதையிலும் குறுக்கிட்டது. இரவு நேர வேலை முடிந்து வீடு திரும்பியவரை லாரி டிரைவர்கள் வழிமறிக்க, அங்கிருந்து தப்பித்து வந்தவர் மறுநாளே பெரும் முடிவை கையில் எடுத்தார்.விடிந்ததும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்றவர் கையேந்தி கண்ணீர் சிந்தினார். மொட்டை போட்டு சேலையை கீழிறக்கி வைத்தவர், வேட்டி, சட்டை அணிந்து ஆண் வேடமணிந்தார். அன்றிலிருந்து இன்றுவரை அதுதான் பேச்சியம்மாளின் அடையாளமானது.

30 ஆண்டுகளாக ஆணாக வேடமிட்டு வாழும் பெண்,ஆணாக வேடமிட்டு வாழும் பெண்,பேச்சியம்மாள்

மூன்று வருடங்கள் உருண்டோட குழந்தையுடன் சென்னைக்கு புறப்பட்டார். டீக்கடையில் வேலை பார்த்து காசு சேர்த்தவர், தனது பெயரை வாக்காளர் அடையாள அட்டையில் முத்து என்று மாற்றம் செய்துகொண்டார். கூடவே ஆதார் கார்டு, வங்கி கணக்கு என அனைத்திலும் அப்டேட் செய்து கொண்டார். பேச்சியம்மாள் என்ற பெயருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதனால் இங்கிருந்து நாமும் அவரை முத்து மாஸ்டர் என்றே அழைக்கலாம்.

30 ஆண்டுகளாக ஆணாக வேடமிட்டு வாழும் பெண்,ஆணாக வேடமிட்டு வாழும் பெண்,பேச்சியம்மாள்

பிறகு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய முத்து மாஸ்டர் 100 நாள் வேலைத்திட்டம், பெயிண்டிங் வேலை, டீக்கடை என கிடைத்த வேலைக்குச் சென்றிருக்கிறார். அதற்குள் மகளும் வளர்ந்துவந்தாள்… முத்துமாஸ்டரின் ஆண் வேடம் மகளுக்கும் பாதுகாப்பாய் போனது.இதற்கிடையே முத்து மாஸ்டரின் அன்றாட வாழ்க்கையும் ஒரு ஆண்னை போலவே மாறியது. பேருந்தில் பயணித்தால் ஆண் இருக்கையில் அமரும் இவர், பொதுக்கழிப்பிடத்தில் கூட ஆண் கழிப்பிடத்தைத்தான் பயன்படுத்துகிறார். பெண்களுக்கு பேருந்துகளில் கட்டணம் இலவசம் என்றாலும் தான் ஆண் என்ற ரூபத்தை சுமந்திருப்பதால் அந்த சலுகைக்கும் அவருக்கு இடமில்லாமல் போனது.  

30 ஆண்டுகளாக ஆணாக வேடமிட்டு வாழும் பெண்,ஆணாக வேடமிட்டு வாழும் பெண்,பேச்சியம்மாள்

மாற்றத்தின் உச்சக்கட்டம் மற்ற ஆண்களிடமும் தன்னை ஆணாகவே காட்டிக்கொள்ள சிகரெட், பீடி போன்ற பழக்கங்களை கற்றுக் கொண்டு கெத்தாக வலம் வந்திருக்கிறார். காலம் கடந்து போக பெற்ற மகளை பாதுகாக்க இதுவே தொடர்ந்தது. இப்படியே 57 வயதை கடந்த முடித்த முத்து மாஸ்டர் கடைசி வரை இதுவே தன்னுடை அடையாளம் என்று புன்னகையோடு சொல்லிக்கொண்டு நடைபோட்டார்.

மேலும் படிக்க | இஸ்ரோவின் அடுத்த மைல்கல் – ககன்யான் பூஸ்டர் சோதனை வெற்றி

வயிற்று பிழைப்புக்காக வேடம் போடும் மனிதர்களுக்கு மத்தியில் ஆண்களிடம் இருந்து பாதுகாத்து வாழ்க்கை முழுக்க ஆணாக வேடம் போட்டிருக்கும் பேச்சியம்மாளின் கதையை கேட்டால் உங்களுக்கும் நெஞ்சம் உருகும்..!

மேலும் படிக்க | முன்பதிவு இல்லாத 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் 23 முதல் மீண்டும் இயக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, (https://www.facebook.com/ZeeTamilNews/) ட்விட்டரில் @ZeeTamilNews (https://twitter.com/ZeeTamilNews) மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews (https://t.me/ZeeTamilNew) என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Leave a Comment

Your email address will not be published.