Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்Three more stars including biggboss fame join in vijay in thalapathi 66...

Three more stars including biggboss fame join in vijay in thalapathi 66 movie – தமிழ் News

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் ஷாம் ஆகிய இருவரும் இணைந்ததாக சற்றுமுன் பார்த்த நிலையில் தற்போது மேலும் சிலர் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில்ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 66’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் ஷாம் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்து உள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது சங்கீதா, யோகி பாபு மற்றும் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா ஆகியோர் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் இந்த படத்தில் இணைந்து விட்ட நிலையில் தற்போது இன்று மட்டும் 5 பிரபலங்கள் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் யாரெல்லாம் இந்த படத்தில் இணைகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

’தளபதி 66’ திரைப்படம் ஒரு மிகப்பெரிய கூட்டுக்குடும்ப அதை என்று கூறப்படுவதால் அதிக நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்க உள்ளனர். மேலும் ஒரு சில குழந்தை நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்து வருவதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.




Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments