Thursday, June 30, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்tn cabinet reshuffle: உதயநிதி மற்றும் இருவருக்கு அமைச்சர் பதவி?- மே 7 நாள் குறித்த...

tn cabinet reshuffle: உதயநிதி மற்றும் இருவருக்கு அமைச்சர் பதவி?- மே 7 நாள் குறித்த ஸ்டாலின்! – sources said two more dmk mla will be placed in tn cabinet along with udhayanidhi stalin soon

ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று நாளை மறுநாளுடன் (மே 6) ஓராண்டு நிறைவடைய உள்ளது. இதனையொட்டி தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் இருக்கும் என்று பல மாதங்களுக்கு முன்பே கோட்டை, அறிவாலய வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.

குறிப்பாக துர்கா ஸ்டாலினின் விருப்பப்படி உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த முறை அமைச்சரவை இடம் கன்ஃபார்ம் என்று விவரமறிந்த திமுக உடன்பிறப்புகள் பெருமிதத்துடன் தெரிவித்து வந்தனர்.
அறிவாலய வட்டாரத்தில் உடன்பிறப்புகள் மத்தியில் சில மாதங்களாகவே வலம் வந்து கொண்டிருந்த இத்தகவலை மெய்ப்பிக்கும்படியாக கோட்டை வட்டாரத்தில் தற்போதொரு தகவல் தீயாய் பரவி வருகிறது.

வரும் 7 ஆம் தேதி, உதயநிதி ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளதாகவும், அன்றைய தினம் அவர் ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பொறுப்பேற்பார் எனவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீட் விலக்கு மசோதா: இறங்கி வந்த ஆளுநர்… சபையில் முதல்வர் சொன்ன முக்கிய அப்டேட்!
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர்,பாலுவின் மகனான டிஆர்பி ராஜா, திமுக எம்எல்ஏ தாயகம் கவி ஆகியோரும் உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

உதயநிதி உட்பட மூன்று பேர் அமைச்சராக பொறுப்பேற்கும் பட்சத்தில் இவர்களுக்கு எந்த துறை வழங்கப்படும் என்று திமுக உடன்பிறப்புகள் ஆவலோடு எதிர்ப்பார்த்திருக்கின்றனர்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments