மேலும், தரமற்ற அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலைக் கடைகளில் வழங்க வேண்டாம் என்றும், விற்பனையாளர்களுக்கு பணியிடத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நேரடியாக 9884000845 எண்ணிற்கு வாட்ஸப் மூலம் தொடர்புறுத்தலாம் என்றும் தெரிவித்தார். நியாய விலைக் கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரர்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த பயிற்சி முகாமில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் வே.ராஜாராமன், கலந்துகொண்டு பொது விநியோகத் திட்டக் கட்டமைப்பு, பொது விநியோகத் திட்ட நோக்கம் ஆகியவை குறித்து எடுத்துரைத்து, பொது விநியோகத் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்த கேட்டுக் கொண்டார்.
பயிற்சி முகாமில், கூட்டுறவுச் சங்கங்களில் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) மு.அருணா, கலந்து கொண்டு நியாய விலைக் கடைப் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கினார். இணைப்பதிவாளர் (பொவிதி) வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்கள் மற்றும் உணவு வழங்கல் துறை துணை ஆணையர் ஆகியோர் பொது விநியோகத் திட்டம் குறித்து சிறப்பு பயிற்சி வழங்கினார்.
tn ration shops: ரேஷன் கடை ஊழியர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? அதிகாரிகள் விளக்கம்! – a special training camp was held for ration shops employees in chennai
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பணிபுரியும் நியாய விலைக் கடைப் பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி நேற்று (மே 13) சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.