Thursday, June 30, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்Tomato Fever: Symptoms, preventive measures, TN is safe | தக்காளி காய்ச்சல்- அறிகுறிகள்,...

Tomato Fever: Symptoms, preventive measures, TN is safe | தக்காளி காய்ச்சல்- அறிகுறிகள், சிகிச்சை முறை என்ன? தமிழகத்தில் அச்சம் வேண்டாம்

கொரோனா வைரஸின் நான்காவது அலைக்கு மத்தியில் தற்போது குழந்தைகளை குறிவைக்கும் தக்காளி காய்ச்சல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கேரளாவில் தற்போது 82 பேருக்கு தக்காளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நோய் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டது. தற்போது வரை இந்த வைரஸ் பரவல் முழுமையாக ஒழிக்க முடியவில்லை. வேக்சின் பணிகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக வைரஸ் பாதிப்பை இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வைத்துக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தக்காளி வைரஸ்? தக்காளிக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை: ராதாகிருஷ்ணன் விளக்கம்!

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், மக்களும் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். இதற்கிடையில் கேரளாவில் சில மாவட்டங்களில் தக்காளி வைரஸ் என்று அழைக்கப்படும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், மக்களும் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். இதனிடையே கேரளாவில் சில மாவட்டங்களில் தக்காளி வைரஸ் என்று அழைக்கப்படும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tomato fever

பாதிக்கப்பட்ட பகுதிகளில் அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதேநேரம் அண்டை மாநிலமான தமிழகத்திலும் இந்த தக்காளி காய்ச்சல் பரவுமோ என்ற அச்சமும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் வைரஸ் பற்றி அச்சப்பட தேவையில்லை என்றார். 

அது சாதாரண வைரஸ்தான்,  தக்காளிக்கும், இந்த வைரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டு குணமான குழந்தைகளுக்கு இந்த நோய் வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

தக்காளி காய்ச்சல் என்றால் என்ன?
தக்காளி காய்ச்சல் என்பது கேரளாவில் அதிகம் காணப்படும் அறியப்படாத காய்ச்சலாகும். இருப்பினும், இந்த நோய் வைரஸ் காய்ச்சலா அல்லது சிக்குன்குனியா அல்லது டெங்கு காய்ச்சலால் வந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. தடுப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் கிராமங்களில் விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி உள்ளனர்.

தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள்
இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில், உடலில் கிட்டத்தட்ட தக்காளி அளவு சொறி வெளியேறும். தோலில் எரியும் உணர்வு ஏற்படலாம். நீரிழப்பு அறிகுறிகள் நாக்கில் உலர்ந்த வாயுடன் சேர்ந்து தோன்றும். சில நோயாளிகள் தங்கள் உடலில் உருவான தக்காளி போன்ற சொறி முதலில் புழுக்கள் வெளியேறிய கொதிப்பை உருவாக்கியது என்று கூறியுள்ளனர்.

இதன் அறிகுறிகள் என்ன
* அதிக காய்ச்சல்
* உடல் வலி
* மூட்டுகளில் வீக்கம்
* சோர்வு
* தக்காளி வடிவில் சொறி
* கைகளின் நிறமாற்றம்
* முழங்கால்களின் நிறமாற்றம்

தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை
* குழந்தைக்கு இந்த அறிகுறிகள் இருந்தால், அருகில் உள்ள மருத்துவரை அணுகவும்.
* இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக திரவங்களை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
* குழந்தைகளை தொற்று நோயிடமிருந்து விலக்கி வைக்க வேண்டும்.
* நோயாளிக்கும் அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கும் தூய்மையை பராமரிப்பது முக்கியம்.
* பல சமயங்களில் காய்ச்சல் ஒரு வாரம் நீடிக்கும் என்பதால் சரியான ஓய்வு தேவை.

மேலும் படிக்க | மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்…மாற்றி மாற்றி பேசும் அரசு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments