Wednesday, June 29, 2022
Homeசினிமா செய்திகள்Turning Red விமர்சனம்: பதின்ம வயதும், அதனுள் இருக்கும் பூதமும்... மீண்டும் சொல்லியடித்த பிக்ஸார்! |...

Turning Red விமர்சனம்: பதின்ம வயதும், அதனுள் இருக்கும் பூதமும்… மீண்டும் சொல்லியடித்த பிக்ஸார்! | A soul soothing coming of age drama Turning Red from Pixar

கனடா நாட்டில் வசிக்கும் சீன வம்சாவளியைச் சேர்ந்த 13 வயதுப் பெண் மெய்லின் லீ. குறும்புக்கார பெண்ணான மெய்லினுக்கோ அத்தனை ஆசைகள். அத்தனைக்கும் ஆசைப்படு என மனமும், நண்பர்கள் குழாமும் சொன்னாலும், எல்லாவற்றுக்கும் NO சொல்லி வளர்க்கிறார் மெய்லினின் தாயார். அம்மாக்கள் என்றாலே அப்படித்தானே. ஒரு நாள் அதிகாலை சுபவேளையில், தூக்கம் கலைந்து எழுந்திருக்கும் மெய்லின் மொத்தமாய் சிவப்பு பாண்டாவாய் மாறிப்போகிறாள். தீவிர மன அழுத்தமோ, அதீத சந்தோஷமோ ஏற்பட்டால் மெய்லின் பாண்டாவாகிவிடுவார். இதை எப்படி மெய்லினும், மெய்லினின் குடும்பமும் சமாளிக்கிறது; மெய்லினின் தோழிகள் இதற்கு எப்படி உதவுகிறார்கள் என்பதாக விரிகிறது Turning Redன் கதை.

பதின்ம வயதில் இருக்கும் ஒரு பெண்ணின் ஆசைகளை அழகாக ஃபேன்டஸியாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் டோமி ஷி. பிக்ஸார் நிறுவனத்துக்காக Bau என்னும் குறும்படத்தை இயக்கி ஆஸ்கார் விருது வென்றவர் டோமி ஷி. பிக்ஸார் குறும்படம் ஒன்றை இயக்கிய முதல் பெண்ணும் இவரே. ஸ்டோரிபோர்டு வல்லுநரான இவர் பல பிக்ஸார் படங்களில் உதவியிருந்தாலும், சில நிமிடங்களே இருக்கும் Bau படத்தின் மூலம் சர்வதேச அளவில் பெயர் பெற்றார். Bau குறும்படத்தில் அதீத பாதுகாப்புடன் ஒரு தாய் தன் குழந்தையை எப்படிப் பிரியாமல் இருக்கிறார் என்பதை அழகான உருவகத்துடன் விளக்கியிருப்பார். தான் சமைத்த கொழுக்கட்டைக்கு (சீன bau தான், தமிழுக்கு கொழுக்கட்டை என வைத்துக்கொள்ளலாம்) உயிர் வந்துவிட அதைச் சீராட்டி வளர்க்கிறார் ஒரு சீனப்பெண். ஒரு கட்டத்துக்கு மேல் பிற குழந்தைகளுடன் சேர்வது, தனியாகச் செல்வது என அந்தக் குழந்தை முடிவு செய்ய, அதை எதிர்த்து சண்டையிடுகிறார் தாய். இதே டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த குறும்படத்தை நீங்கள் கண்டு மகிழலாம்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments