Wednesday, June 29, 2022
Homeசினிமா செய்திகள்Two movies release postponed in the last minutes - தமிழ் News

Two movies release postponed in the last minutes – தமிழ் News

இந்த வாரம் 6 திரைப்படங்கள் ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அதில் இரண்டு திரைப்படங்கள் கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் ரசிகர்கள் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு வாரமும் நான்கு முதல் ஆறு திரைப்படங்கள் வரை ரிலீசாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் ஆறு திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆர்கே சுரேஷின் ‘விசித்திரன்’, கேஎஸ் ரவிக்குமாரின் ‘கூகுள் குட்டப்பா’, ஜிவி பிரகாஷின் ‘ஐங்கரன், ’அக்கா குருவி’, ’வாய்தா’ மற்றும் ’துணிகரம்’ ஆகிய 6 படங்கள் ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் ‘ஐங்கரன்’ மற்றும் ‘வாய்தா’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அந்தந்த படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷின் ‘ஐங்கரன்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒருசில வருடங்கள் ஆன நிலையில் தற்போது தான் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மீண்டும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள ’விசித்திரன்’ மற்றும் ‘கூகுள் குட்டப்பா’ ஆகிய இரண்டு படங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments