Thursday, June 30, 2022
Homeஉலக செய்திகள்UAE new President Sheikh Mohamed Bin Zayed and relationship with India |...

UAE new President Sheikh Mohamed Bin Zayed and relationship with India | சவுதியின் புதிய ஆட்சியாளர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

புதிய ஆட்சியாளரின் தலைமையில் இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர உறவு தொடர்ந்து மேம்படும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

“அபுதாபியின் ஆட்சியாளர் எச்.எச். ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது நல்வாழ்த்துக்கள். அவரது ஆற்றல்மிக்க மற்றும் தொலைநோக்கு தலைமையின் கீழ், நமது விரிவான மூலோபாய கூட்டாண்மை தொடர்ந்து ஆழமடையும் என்று நம்புகிறேன்” என்று பிரதமர் கூறினார்.

.

முன்னதாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஃபெடரல் சுப்ரீம் கவுன்சில், நாட்டின் ஆட்சியாளரை தேர்ந்தெடுக்க கூடியது. ஐந்தாண்டு காலத்திற்கு பதவியில் இருப்பார். ஃபெடரல் சுப்ரீம் கவுன்சில் உறுப்பினர்களில் இருந்து புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கலீஜ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates) நாட்டின் ஏழு பிராந்தியங்களின் (sheikhdoms) ஆட்சியாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்தனர். 2004 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருந்த அதிபர் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான், நீண்ட காலமாக நோயாளியாக இருந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று காலமானார். 

அவருக்கு வயது 73. இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிறுவனர் அதிபர் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானின் மூத்த மகன் ஆவார்.

மேலும் படிக்க | இம்ரானின் முன்னாள் அமைச்சர்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய தடை

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஷேக் முகமது இதற்கு முன்பு ஜனவரி 2005 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதியாக பணியாற்றினார்.

யுஏஇ ஆயுதப் படைகளை மூலோபாய திட்டமிடல், பயிற்சி, நிறுவன அமைப்பு மற்றும் பாதுகாப்பு திறன்களை ஊக்குவித்தல் போன்றவற்றில் முக்கிய பங்கு வகிப்பதற்காக அவர் அறியப்படுகிறார்.

1948 இல் பிறந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மன்னரின் ஒன்றுவிட்ட சகோதரர் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல்-நஹ்யான்.

2008 நிதி நெருக்கடியின் போது ஐக்கிய அரபு எமிரேட்ஸை உலகளாவிய முக்கியத்துவத்திற்கு கொண்டு வர உதவியதற்காகவும், கொந்தளிப்பான காலங்களில் நாட்டை வழிநடத்தியதற்காகவும் ஐக்கிய அரபு அமிரகத்தின் அரசர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான்  பெருமளவில் பாராட்டப்படுகிறார்.

மேலும் படிக்க | இந்தியா-UAE தடையற்ற வாணிப ஒப்பந்தம் MSME துறைக்கு ஊக்கம் அளிக்கும்: பியூஷ் கோயல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments