Monday, June 20, 2022
Homeஉலக செய்திகள்UK defence ministry intelligence report on Russia invasion | ரஷ்யா படையெடுப்பு பற்றிய...

UK defence ministry intelligence report on Russia invasion | ரஷ்யா படையெடுப்பு பற்றிய இங்கிலாந்து பாதுகாப்பு உளவுத்துறை அறிக்கை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் உலக அளவில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. பிற நாடுகளுக்கு மட்டுமல்ல, ரஷ்யாவுக்கே பலத்த சேதத்தையும், பிரச்சனைகளையும் இந்தப் போர் ஏற்படுத்தியிருக்கிறது.

உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷ்யாவின் படைபலத்தில், அதன்  தரைப்படையில் மூன்றில் ஒரு பங்கு குறைந்திருக்கலாம் என இங்கிலாந்து பாதுகாப்புத்துறையின் உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன.  

“ரஷ்ய UAVகள் தந்திரோபாய விழிப்புணர்வு மற்றும் பீரங்கிகளை இயக்குவதற்கு இன்றியமையாதவை, ஆனால் உக்ரேனிய விமான எதிர்ப்பு திறன்களால் பாதிக்கப்படக்கூடியவை” என்று இங்கிலாந்து நாட்டின் உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

“போர் தொடர்வதால், தொடர்ந்து குறைந்த மன உறுதி, வலிமை குறைவது மற்றும் போர் செயல்திறன் ஆகியவற்றால் ரஷ்ய இராணுவம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறியது.

மேலும் படிக்க | ரஷ்யாவின் மிரட்டலுக்கு அடிபணியாத பின்லாந்து; நேட்டோவில் இணைய விருப்பம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிப்ரவரி 24 அன்று உக்ரைனுக்கு எதிராக  “சிறப்பு இராணுவ நடவடிக்கையை” அறிவித்ததை அடுத்து, அண்டை நாட்டின் மீது ரஷ்ய துருப்புக்கள் படையெடுத்தன. இதற்க்கு உக்ரைன் ராணுவம் கடுமையான எதிர் தாக்குதலை மேற்கொண்டன. 

“ரஷ்யாவின் டான்பாஸ் தாக்குதல், வேகத்தை இழந்துவிட்டது என்பதோடு, அது தனது திட்டமிட்ட கால அட்டவணையில் கணிசமாக பின்தங்கி விட்டது” என்று பிரிட்டன் உளவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கியேவைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தனது படைகள் பின்வாங்கியதை அடுத்து, கிழக்குப் பகுதியில் தனது படைகளை குவிப்பதாக ரஷ்யப் படைகள் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

“கடந்த மாதத்தில் ரஷ்ய எதிர்பார்த்த வெற்றியை ரஷ்யாவால் அடைஇய முடியவில்லை. அதே நேரத்தில் தொடர்ந்து அதிக அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன” என்று அறிக்கை கூறியது.

மேலும் படிக்க | ரஷ்யா ஏவுகணை பயங்கரவாத உத்தியை பயன்படுத்துகிறது: உக்ரைன்

மேலும், ரஷ்யாவிடம் பிரிட்ஜிங் கருவிகள் பற்றாக்குறையாக உள்ளது என்று கூறும் அந்த அறிக்கை, இதனால் ரஷ்யாவின் தாக்குதலின் வீரியம் குறைந்துவிட்டதாக கூறுகிறது. 

“தற்போதைய நிலைமைகளை வைத்துப் பார்க்கும்போது, அடுத்த 30 நாட்களில் ரஷ்யா, உக்ரைன் மீதான போரில், திடீரென முன்னேற்றத்தை மேர்கொள்ளவாய்ப்பில்லை” என்று இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்புத்துறை உளவுப்பிரிவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

(பொறுப்புத் துறப்பு: உக்ரைன்-ரஷ்யா மோதல் தொடர்பாக, பலவிதத்திலும்  பல உரிமைகோரல்கள் மற்றும் எதிர் உரிமைகோரல்கள் செய்யப்படுகின்றன. நிமிடத்திற்கு நிமிடம் நிலவரம் மாறினாலும், ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பான செய்திகளை துல்லியமாக வாசகர்களுக்கு வழங்க ஜீ நியூஸ் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டுள்ளது. ஆனால், கிடைக்கும் அறிக்கைகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் நம்பகத்தன்மையை எங்களால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியாது)

மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments