மெஜல்லன் கடற்பயணம் (Magellan Expedition) குறித்த மேப் ஒன்றைத் திருட முற்படும்போது மாட்டிக் கொள்கிறார்கள் டிரேக் சகோதரர்கள். காவல்துறையிடம் இருந்து தப்பிக்க, மூத்த சகோதரன் சாம் டிரேக் தன் 10 வயது தம்பியான நாதன் டிரேக்கைப் பிரிந்து செல்கிறார். ‘நிச்சயம் திரும்பி வருவேன்’ என்று வாக்களித்துச் செல்லும் சாமிடம் இருந்து நாதனுக்கு வெறும் போஸ்ட்கார்டுகள் மட்டுமே வருகின்றன. 15 வருடங்கள் கழித்து, பார்டெண்டராக வேலை செய்யும் நாதனுக்கு, சாமின் நண்பர் விக்டர் சல்லிவன் அறிமுகமாகிறார். சாம் விட்டுச் சென்ற மெஜ்ஜலன் கடற்பயணத்தின் புதையலைத் தேடும் சாகசப் பயணத்தை நாம் தொடரவேண்டும் என்றும், அதன் மூலம் சாமை கண்டுபிடிக்கலாம் என்றும் நம்பிக்கைத் தெரிவிக்கிறார். இருவரும் தங்களின் சாகசத்தைத் தொடங்க, அவர்களின் வழியில் நண்பர்களும், நண்பர்களின் போர்வையில் துரோகிகளும் வருகிறார்கள். பல சவால்களையும், சாகசங்களையும் கடந்து இவர்கள் இருவரும் புதையலை எடுத்தார்களா என்பதே படத்தின் கதை.
Uncharted Review: வீடியோ கேம் டு ஹாலிவுட் சினிமா! மார்க் வால்பெர்க் – டாம் ஹாலண்ட் கூட்டணி எப்படி? | Tom Holland and Mark Wahlberg starrer Uncharted movie review
RELATED ARTICLES