vaigasi matha rasi palan: வைகாசி மாத ராசிபலன் 2022 : பண மழையில் நனையப்போகும் ராசிகள்

​மேஷம்

மேஷ ராசிக்கு 2ம் இடமான குடும்ப, தன ஸ்தானத்தில் சூரியனின் சஞ்சாரம் நிகழ உள்ளது. உங்கள் ராசியிலிருந்து மாற உள்ள சூரிய பகவானால் உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் நிறைய மாற்றங்கள் காணப்படும். பேச்சில் கனிவு தேவை. உங்கள் பேச்சால் மற்றவர்களின் மனம் காயப்பட வாய்ப்புள்ளது என்பதால் உரையாடலின் போது, உங்கள் வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துவது அவசியம்.

இந்த மாதத்தில் குடும்ப உறுப்பினர், பெற்றோருடன் சில தகராறு, மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், அமைதியைக் கடைப்பிடிக்கவும். மாணவர்களுக்கு இந்த மாதம் சாதகமாக இருக்கும். உத்தியோகம், தொழிலில் உங்களுக்கு சாதகமான மாதமாக இருக்கும்.

​ரிஷபம்

சூரியனின் சஞ்சாரம் உங்கள் ராசியிலேயே நிகழ்வதால், சுய ஸ்தானத்தில் சூரியனின் சஞ்சாரத்தால் குடும்ப உறுப்பினர்களுடனும், குறிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகளைச் சந்திக்க நேரிடும். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சாதகமான மாதமாக இருக்கும்.

மிகவும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய மாதமாக இருக்கும் என்பதால் உங்களின் செயல்களுக்கு விரைவாக நல்ல பலன்கள் கிடைக்கும். அதனால் நீங்கள் உங்கள் இலக்கை சரியாக நிர்ணயித்து அதற்கேற்றார் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். புதிதாக தொழில் தொடங்கினால் சாதகமான பலன் கிடைக்கும்.

சாணக்கிய நிதி : தொழில் முன்னேற்றம், விரைவாக பணக்காரராக செய்ய வேண்டியவை

மிதுனம்

சூரியனின் சஞ்சாரம் உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் நிகழப் போகிறது. இந்த மாதத்தில் உங்களின் முடிக்கப்படாத வேலைகள், தடைப்பட்ட வேலைகளை முடிக்க சாதகமான மாதமாக இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து புதிய இடத்துக்கு செல்ல விரும்புவீர்கள். திட்டமிடுவீர்கள்.

திருமண வயதில் இருக்கும் இளைஞர்களுக்கு திருமணம் கைகூடி குடும்ப வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க சாதகமாக இருக்கும்.

உடன்பிறந்தவர்களுடன் சில தவறான புரிதலால் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் பேச்சில் கட்டுப்பாடு தேவை. உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. ஆபத்தான செயல்களிலிருந்து விலகி இருக்கவும்.

​கடகம்

கடக ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானத்தில் சூரியனின் சஞ்சாரம் நிகழ உள்ளது. அதனால் உங்களின் எந்த ஒரு தொழில் மற்றும் உத்தியோக ரீதியான விஷயங்களில் நல்ல லாபம் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரத்தில் சில முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதன் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான நேரத்தை உங்கள் துணையுடன் சேர்ந்து செலவிடுவீர்கள். புதிய நபர்களுடனான உறவு கிடைக்கும். உங்கள் எதிர்காலத்தில் பலன் தரக்கூடிய நற்பலன்கள் உண்டாகும்.

திருப்பதிக்கு சென்றால் ஏன் மொட்டை போடுகிறோம்? – எந்த நாளில் சென்றால் விசேஷம்

​சிம்மம்

சிம்ம ராசி அதிபதியான சூரியனின் சஞ்சாரம் உங்கள் ராசிக்கு10ம் வீடான கர்ம, தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார், அதனால் உங்கள் தொழில், வியாபார ரீதியாக லாபமும், பலமும் பெறுவீர்கள். உங்களின் பெற்றோருடனான உறவு சிறக்கும்.

உத்தியோகத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். நல்ல ஊக்கத்தொகை பெற வாய்ப்புள்ளது. சுறுசுறுப்பாக உழைப்பீர்கள் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உங்களின் வசதி அதிகரிக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

​கன்னி

கன்னி ராசிக்கு 9ம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் சூரியனின் சஞ்சாரம் நிகழ்கிறது. உங்களின் குடும்ப உறவு நன்றாக இருக்கும் என்றாலும், ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

வியாபாரம், தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு சிறப்பு உரிமை, பாராட்டு கிடைக்கும். உங்களின் கனவை நிறைவேற்ற சிறப்பான மாதமாக இருக்கும். ஆன்மிகத்தில் கூடுதல் நாட்டம் ஏற்படும். வேலை சிறக்க நல்ல மாதமாக இருந்தாலும் யாரை நம்பியும் உங்களின் வேலையை ஒப்படைக்க வேண்டாம்.

சந்திர கிரகணம் 2022: பிளட் மூன்- மோசமாக பாதிக்கப்பட உள்ள ராசிகள்

​துலாம்

துலாம் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சூரியனின் சஞ்சாரம் நிகழப் போகிறது. உங்களின் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சமயம் சார்ந்த விஷயங்களில் கலந்து கொள்வீர்கள். முன்னோர்கள் வழிபாடு செய்வது நல்லது.

உங்களின் மதிப்பு, மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும். வெளிநாட்டில் வேலை, படிப்பு சார்ந்த முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு சாதகமான மாதமாக இருக்கும். தொழில், வணிகம் சார்ந்த நடவடிக்கையால் நல்ல லாபமும், நிதி நிலை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

அதிக பணம் சம்பாதிக்க வேண்டுமா?- நிதி நிலை முன்னேற செய்ய வேண்டிய எளிய ஜோதிட வழிகள்

​விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் ஆழ்ந்த சிந்தனை ஏற்படக்கூடிய மாதமாக இருக்கும். அடுத்தடுத்து ஏதேனும் ஒரு விஷயத்தைக் குறித்து ஆழமாக யோசித்துக் கொண்டிருப்பீர்கள்.

நண்பர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். அவர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். தேவையற்ற சந்தேகங்கள் ஏற்படும். சில சவாலான விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். நிதி நிலை சார்ந்த விஷயங்களில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். தொழில் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தனுசு

உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் சூரியனின் சஞ்சாரம் நடப்பதால் உங்களுக்கு ஏற்ற இறக்கமான சூழல் இருக்கும். உங்கள் வேலைகளை பொறுப்பாக செய்து முடிப்பது நல்லது. திருமண முயற்சி உள்ளிட்ட சுப காரியங்கள் சாதகமான மாதமாக இருக்கும். சொந்த தொழில் தொட்னக்க நினைப்பவர்களுக்கு சாதகமான மாதமாக இருக்கும்.

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும், வேலை தொடர்பான சில பயணங்களை மேற்கொள்ள வெண்டியது இருக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் உங்களின் பேச்சு வார்த்தையில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

யாரைப் பார்த்தால் உங்கள் மனதில் பட்டாம்பூச்சி பறக்கும்?- உங்கள் மனம் கவரும் ராசி

​மகரம்

சூரியன் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கப்போகிறார்.புதிய, புதிய விஷயங்களில் உங்களின் நாட்டம் செல்லும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். காதல் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

குடும்பம், பணியிடத்தில் எந்த விதமான தகராறு, வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்ப உறவில் சிறிய விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மாதத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தை முழுமையாக கவனித்துக் கொள்வது அவசியம்.

​கும்பம்

கும்ப ராசிக்கு நான்காம் வீட்டில் சூரியனின் சஞ்சாரம் நிகழ்வதால் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சிலருக்கு வேலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. தாயுடன் சில கருத்தியல் வேறுபாடுகள் ஏற்படலாம். வேலையில் முன்னேற்றமும், நல்ல வருமானமும் உண்டாகும்

திருமணமானவர்களுக்குச் சாதகமான அன்பு அதிகரிக்கக்கூடிய மாதமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வண்டி வாகனம் வாங்க வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு சாதகமான மாதம். சுறுசுறுப்பாக இந்த மாதம் செயல்படுவீர்கள்.

​மீனம்

மீன ராசிக்கு மூன்றாம் இடத்தில் சூரியனின் சஞ்சாரம் நடப்பதால் புதிய விஷயங்களில் ஆர்வமுடன் கற்றுக் கொள்வீர்கள். சில முக்கிய பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. நீங்கள் ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். நீதிமன்ற வழக்கு சார்ந்த விஷயங்களில் நல்ல சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை மாற்றத் திட்டமிடுபவர்களுக்கு நல்ல சலுகைகளைப் பெறலாம்.

Source link

Leave a Comment

Your email address will not be published.