Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்Vanibojan update of Bharath 50 movie - தமிழ் News

Vanibojan update of Bharath 50 movie – தமிழ் News

பரத் நடிக்கும் 50-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை இந்த படத்தின் நாயகி வாணி போஜன் தெரிவித்துள்ளார்

தமிழ்த் திரையுலகில் ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பரத். இந்த நிலையில் கடந்த 19 ஆண்டுகளில் 49 படங்களில் நடித்துள்ள பரத் 50-வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் பரத் ஜோடியாக வாணிபோஜன் நடிக்கிறார் என்பதும் இந்த படத்தை ஆர்பி பாலா இயக்குகிறார் என்பது தெரிந்ததே.

இந்த படத்திற்கு ‘லவ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துவிட்டதாக வாணிபோஜன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்ததை கொண்டாடும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

திரில்லர் கலந்த பேமிலி டிராமா திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ஆர்பி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் விவேக் பிரசன்னா, பிக் பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரான்னி ரபேல் இசையில், பிஜி முத்தையா ஒளிப்பதிவில், அஜய் மனோஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments