Sunday, July 3, 2022
Homeஜோதிடம்Vara Rasi Palan: Weekly Horoscope 23 May to 29 May 2022 :...

Vara Rasi Palan: Weekly Horoscope 23 May to 29 May 2022 : வார ராசிபலன் 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம் ஏற்படும்

​மேஷம் வார ராசிபலன்:

மேஷ ராசிக்கு இந்த வாரம் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொள்வீர்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். புதிய வழிகளில் பண வருவாய் வர வாய்ப்புகளும் உள்ளன. குடும்பத்தில் மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தால் பணிகளில் வெற்றி பெறுவீர்கள். திருமண வாழ்வில் இனிமை காணப்படும். இந்த வாரம் உங்கள் எதிரிகளை வெல்வீர்கள். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய எந்த ஒரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

சனி வக்ர பெயர்ச்சி ஜூன் 5 : ஆபத்தை தடுக்க கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

​ரிஷபம் வார ராசிபலன்:

இந்த வாரம் ரிஷப ராசியினர் குடும்பம் மற்றும் பணியிடத்தில் நல்லுறவை ஏற்படுத்துவீர்கள். தொழிலதிபர்கள் உங்கள் பணியாளர்களிடமும், உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள், சக ஊழியர்களுடன் நல்லாதரவும், நல்லுறவும் பேணுவீர்கள். வேலை, தொழில் ரீதியாக புதிய திட்டங்களை தீட்டுவதில் வெற்றி பெறுவீர்கள்.

குடும்ப உறவில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். உறவுகளின் ஆதரவால் நல்ல லாபத்தை பெற்றிட உதவியாக இருக்கும். நண்பர்களின் உதவியால் எதிரிகளை வெல்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

​மிதுனம் வார ராசிபலன் :

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மோசமான சூழலை சிறப்பாக எதிர்கொண்டு வெல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் எதிரிகளை சிறப்பாக வெல்வீர்கள். நிலம் தொடர்பான ரியல் எஸ்டேட் மூலம் லாபம் கிடைக்கும்.

குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள். உங்களின் நல்ல நிதி நிலை காரணமாக குடும்ப தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பாதாம் நிறம்

அதிர்ஷ்ட எண்: 11

கடகம் வார ராசிபலன் :

கடக ராசிக்கு இந்த வாரம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். உங்களுக்கு விருப்பமான, பழக்கமான நபர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். ஆன்மிகப் பணிகள், சமூக தொண்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் செய்வீர்கள்.

அரசு தொடர்பான பணிகள் தடையின்றி முடிவடையும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக அமையும். நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடனான உறவுகள் சுமுகமாக இருக்கும். புதிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி அதன் மூலம் நல்ல பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 3

​சிம்மம் வார ராசிபலன் :

சிம்ம ராசியினருக்கு அரசு தொடர்பான வேலைகள் சிறப்பாக நிறைவேறும். அரசு ஊழியர்கள் வேலையை சிறப்பாக செய்து அதன் மூலம் மதிப்பு, மரியாதை, லாபமும் கிடைக்கும்.

உயர் பதவியில் இருப்பவர்களுடன் நல்லுறவு ஏற்படும். அரசியலில் உங்களுக்கு ஈர்ப்பு உண்டாகும். அதேசமயம் அரசியலில் ஈடுபடுபவர்களிடம் சற்று கவனமாக இருக்கவும். சில நேரங்களில் உங்களுக்கு பிரச்சனைகள் வரலாம். அக்கம்பக்கத்தினருடனான உறவில் இனிமை இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 9

​கன்னி வார ராசிபலன் :

கன்னி ராசிக்கு அரசியல் தொடர்பான விஷயங்களில் பங்கேற்கவும், அதில் வெற்றியும் கிடைக்க வாய்ப்புள்ளது. அரசு பணியில் உயர் பணியில் இருப்பவர்களுடன் நட்பு ஏற்படும். தொண்டு செய்யும் குணத்துடன் நீங்கள் பிறர் நலனுக்காக பாடுபடுவீர்கள்.

அரசு வகையில் உங்களுக்கு பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும், உயர்கல்வி முயற்சிகளுக்கு சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்

அதிர்ஷ்ட எண்: 21

​துலாம் வார ராசிபலன் :

துலாம் ராசியினருக்கு இந்த வாரம் கலவையான பலன்கள் கிடைக்கும். உங்களின் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது அவசியம். உங்களின் செயல், இயல்பு, நடத்தையில் முதிர்ச்சி காணப்படும்.

திருமண வாழ்க்கை மகிழ்ச்சி தரும் வகையில் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு சிறியளவிலான உடல்நலப் பிரச்சினைகள் தொந்தரவு தரலாம். வார இறுதியில் நண்பர்களுடன் எங்காவது வெளியே செல்ல திட்டமிடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

அதிர்ஷ்ட எண்: 3

​விருச்சிகம் வார ராசிபலன் :

விருச்சிக ராசிக்கு இந்த வாரம் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிப்பீர்கள். உங்களின் நம்பிக்கையும், உங்கள் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும்.

சில வழிகளிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். உங்கள் ஆளுமைப் பண்பு சிறப்பாக இருக்கும். மற்றவர்களுடனான உங்கள் உரையாடலின் சாமர்த்தியமும், இனிமையும் இருக்கும். சுறுசுறுப்பாக செயல்பட்டு உங்கள் பணிகளைச் செய்து முடிப்பீர்கள். இந்த வாரம் சில பல வழிகளிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதக பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

காலில் கருப்பு கயிறு கட்டிக்கொண்டால் மூன்று கிரக பலம் பெறும்

​தனுசு வார ராசிபலன் :

தனுசு ராசியினருக்கு இந்தவாரம் நல்ல வெற்றி, லாபம் தரக்கூடியதாக இருக்கும். வியாபாரத்தில் புதிய விஷயங்களைத் திட்டமிட்டுச் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர் பதிவிகளில் இருப்பவர்களுடன் நல்லுறவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சோம்பேறித்தனமான உங்கள் பழக்கங்களை மாற்றிக் கொள்வது அவசியம். உயர் பதவியில் இருப்பவர்களுடன் இந்த வாரம் நல்லுறவு உருவாகும். குடும்பம் சம்பந்தமான சுபச் செய்திகள் கிடைத்து மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 16

திருநங்கைககளிடம் ஆசி பெறுவது ஏன் தெரியுமா?

​மகரம் வார ராசிபலன் :

நண்பர்கள், சக ஊழியர்களுடன் அன்பும், ஆதரவும் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். நீங்கள் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை, அற்புதமான ஆன்மிக பணிகளுக்காக செலவிடுவீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒத்துழைப்பும் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, அதிகாரிகளுடன் நல்லுறவு உருவாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 12

​கும்பம் வார ராசிபலன் :

கும்ப ராசிக்கு தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சிறப்பாக செய்வீர்கள். தொழில் தொடர்பான புதிய நபர்களின் தொடர்புகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வியாபாரம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடனான உறவு நன்றாக இருக்கும்.

புதிய நபர்கள் கிடைப்பார்கள். இந்த வாரம், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து அனைத்து ஆதரவும் உதவியும் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 6

​மீனம் வார ராசிபலன் :

மீன ராசிக்கு இந்த வாரம் கலவையான பலன்கள் கிடைப்பதாக இருக்கும். குடும்பத்தில் ஒருவரின் உடல்நிலை மோசமடையலாம், இதனால் மன உளைச்சல் அதிகரிக்கும்.

பணியிடத்தில் சக ஊழியர்களுடன் நல்ல உறவைப் பேணுவீர்கள். புகழ் கூடும். ஆன்மிகப் பணிகளிலும், உன்னதப் பணிகளிலும் முழு ஈடுபாட்டுடன் ஈடுபடுவீர்கள். உங்கள் சுற்றத்தாரின் மத்தியில் புகழ் மேலோங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments