Vijay: அப்பா, அம்மாவை தவிக்க விடாதீங்க: விஜய்யை விளாசி தள்ளும் நெட்டிசன்கள்.! – netizens slams actor vijay

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது ‘தளபதி 66‘ படப்பிடிப்பில் பிசியாக உள்ளார் விஜய். ‘பீஸ்ட்’ படம் பலவிதமான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் பாக்ஸ் ஆபிசில் இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்தப்படத்தை விஜய்யின் அப்பா எஸ். ஏ. சந்திரசேகர் பிடிக்கவில்லை என்று கூறியது பெரும் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர். நான் பேசுவது எதற்கும் விஜய் ரியாக்ட் செய்ய மாட்டார், அவருக்கு பிடிக்கவில்லை என்றால் மட்டுமே அதற்கு கருத்து தெரிவிப்பார், இல்லை என்றால் அமைதியாக இருப்பார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கேஜிஎப் 2 படம் எனக்கு மிகவும் பிடித்தது, காட்சி அமைப்பு மிகவும் சிறப்பாக இருந்ததால் லாஜிக் மீறல்கள் தெரியவில்லை என்று கூறியுள்ளார். பீஸ்ட் படத்தில் உள்ளது போல, என் வாழ்க்கையில் விஜய் இப்படி டான்ஸ் ஆடி பாத்ததே இல்லை, படத்தில் லவ் போர்சன்ஸ் மிகவும் நன்றாக இருந்தது. பீஸ்ட் படம் பிடிக்கவில்லை என்று சிலர் கூறுகின்றனர், ஆனால் பீஸ்ட் படம் மிகப்பெரிய கலெக்சன் பெற்றதாக தியேட்டர் அதிபர்கள் கூறி உள்ளனர்.

விஜய்யின் நல்ல விஷயங்களை நான் எப்போதும் பாராட்ட மாட்டேன், நான் செய்வது விஜய்க்கு பிடிக்கவில்லை என்றால் விஜய் அவரது அம்மாவிடம் கூறுவார். எனக்கு இருக்கும் பெரிய ஆசை, விஜய் மாதம் ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வந்து ஒரு அரை மணி நேரம் எங்களுடன் பேசினால் போதும். இது நடந்தால் நான் மிகவும் சந்தோச படுவேன் என மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர்.

திருமண தேதியை குறித்த ஆதி – நிக்கி கல்ராணி: நட்சத்திர ஜோடிக்கு குவியும் வாழ்த்துக்கள்..!
அவரின் இந்தப்பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அப்பா, அம்மாவை இப்படி தவிக்க விடாதீங்க என விஜய்யை விளாசி வருகின்றனர். ரசிகர்களும் சந்திரசேகரின் எமோஷனலான பேச்சை கேட்டு கண் கலங்கியுள்ளனர். ஆயிரம் பிசியா இருந்தாலும் அப்பாவோட வேண்டுகோளை நிறைவேற்றுங்கள் என கோரிக்கை வைத்து விடுகின்றனர்.

“பக்க பக்கமாய் வசனங்கள்” ஆதங்கத்தை வெளிப்படுத்திய மதுரை விஜய் ரசிகர்!

Source link

Leave a Comment

Your email address will not be published.