Saturday, June 18, 2022
Homeசினிமா செய்திகள்vijay sethupathi: வசூலில் சூர்யாவை முந்திய விஜய் சேதுபதி.. அடித்து நொறுக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல்...

vijay sethupathi: வசூலில் சூர்யாவை முந்திய விஜய் சேதுபதி.. அடித்து நொறுக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் வசூல்…! – vijay sethupathy kaathuvakula rendu kaathal movie collections

தமிழ் சினிமாவில் தரமான படங்களின் மூலமும் தனித்துவமான நடிப்பின் மூலமும் ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. ஹீரோ என்ற வட்டத்திற்குள் சிக்கிவிடாமால் எந்த வித கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் நடிப்பவர் விஜய் சேதுபதி.

ஆனால் சமீபகாலமாக இவரது படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கடந்தாண்டு இவர் நடிப்பில் பல படங்கள் வெளியாகி தோல்வியை சந்தித்தது. இதனால் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி காத்திருந்தார் விஜய் சேதுபதி.

ட்வீட் போட்டு மாட்டிக்கொண்ட போனி கபூர்…வெச்சு செய்யும் ரசிகர்கள்..!

இந்நிலையில் இவர் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியானது. விஜய் சேதுபதியுடன் நயன்தாரா மற்றும் சமந்தா நடித்திருந்தனர். அனிருத்தின் இசையில் முக்கோண காதல் கதையாக வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்த பதிவை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசினை வெல்லுங்கள்

கடந்த இரண்டு நாட்களில் இப்படம் தமிழ்நாட்டில் வசூலில் அடித்து நொறுக்கி வருகின்றது. விஜய் சேதுபதி படங்களிலே வெளியான முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய படமாக காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் அமைந்துள்ளது.

இந்நிலையில் இப்படம் USA வில் வெளியான இரண்டு நாட்களில் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வெளியான சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வசூலை விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் முந்தியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அயல்நாட்டிலும் இப்படம் வெற்றிப்படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜய் தேவ்கன் vs சுதீப் – ‘இந்தி’ குறித்து ட்விட்டரில் அனல் பறந்த விவாத போர்!

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments