Sunday, June 19, 2022
Homeசினிமா செய்திகள்Vijay Sethupathi: 'விக்ரம்' படத்திற்காக மிரட்டல் விடுத்த விஜய் சேதுபதி: அரண்டு போன லோகேஷ்.! -...

Vijay Sethupathi: ‘விக்ரம்’ படத்திற்காக மிரட்டல் விடுத்த விஜய் சேதுபதி: அரண்டு போன லோகேஷ்.! – vijay sethupathi says about lokesh kanagaraj

விஜய் சேதுபதி ரசிகர்களின் நெகிழ வைக்கும் செயல்; குவியும் பாராட்டுகள்!

கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்‘ படத்திற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்தப்படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்யும் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் இந்தப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

‘மாநகரம்’ படத்தால் தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலே விமர்சனரீதியாக வரவேற்பை பெற்ற இவர், இரண்டாவது படமாக கார்த்தி நடிப்பில் ‘கைதி’ படத்தை இயக்கினார். பாடல்கள் இல்லாமல் முழுக்க முழுக்க இரவிலே படமாக்கப்பட்ட இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிசிலும் கலக்கியது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனையடுத்து விஜயையும், சேதுபதியையும் வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார். இந்நிலையில் கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் அவர் நடிப்பில் ‘விக்ரம்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் கமலுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற ‘விக்ரம்’ டிரெய்லர், இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் நடிப்பதற்கு தான்தான் லோகேஷ் கனகராஜிடம் நேரில் சென்று வாய்ப்பு கேட்டேன். முதலில் லோகேஷ் கனகராஜ் மறுத்ததாகவும், பின்பு அங்க சுற்றி இங்க சுற்றி தன்னிடம்தான் வரவேண்டும் என்று தான் கொடுத்த மிரட்டலில் தனக்கு நடிக்க சான்ஸ் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கமலின் முடிவால் கதறி அழுத சிம்புவின் தந்தை: ‘விக்ரம்’ விழாவில் வெளிவந்த உண்மை.!
கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்தில் மாஸ்டரில் லோகேஷுடன் பணியாற்றிய விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் இந்தப்படத்தில் இணைந்துள்ளனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பகத் பாசில் நடித்துள்ளார். ஜுன் 3 ஆம் தேதி ரிலீசாக உள்ள இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments