Saturday, June 18, 2022
Homeசினிமா செய்திகள்vijay: Vijay: தளபதி 66 படத்தின் அடுத்த அப்டேட்..! வம்சியின் வேற லெவல் சம்பவம் லோடிங்..!...

vijay: Vijay: தளபதி 66 படத்தின் அடுத்த அப்டேட்..! வம்சியின் வேற லெவல் சம்பவம் லோடிங்..! – vijay thalapathy 66 next update

விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகின்றார். வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் மூலம் விஜய் நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார்.

கடந்தாண்டு இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் ஏப்ரல் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.

பீஸ்ட் விமர்சனத்திற்கு தக்க பதிலடி தந்த ரிப்போர்ட்..!யார் என்ன சொன்னாலும் தளபதி விஜய் கெத்து தான்..

மேலும் தளபதி 66 என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, ஷ்யாம் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படம் விஜய் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்குமென்றும், அனைத்து விதமான ரசிகர்களுக்கும் இப்படம் பிடிக்கும் என்றும் இப்படத்தை சார்ந்தவர்கள் கூறிவருகின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளரான தமன் மற்றும் நடிகர் சரத்குமாரும் இக்கருத்தை கூறியுள்ளனர்.இந்நிலையில் தளபதி 66 படத்தைப்பற்றிய அறிவிப்பை அடிக்கடி வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர் படக்குழுவினர்.

மேலும் இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருப்பதாக தகவல் வந்துள்ளது.

கதைப்படி படத்தில் இரண்டு நாயகிகள் இருப்பதாகவும் அதில் ராஷ்மிகா ஒரு நாயகியாக நடிப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றது. ராஷ்மிகாவை அடுத்து மற்றுமொரு நாயகியை படக்குழு விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் தெரிகின்றது. எனவே தற்போது இந்த தகவல் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments