விஷ்ணு சஹஸ்ரநாமம் மகாபாரத யுத்த களத்தில் யுதிஷ்டிரருக்கு பிதாமகர் பீஷ்மரால் அருளப்பட்ட அற்புதம். மகாபாரதப் போருக்குப் பின், தர்மத்தின் நெளிவுசுளிவுகளைப் பற்றி யுதிஷ்டிரர் கண்ணனிடம் கேட்டபோது, பீஷ்மரிடமே கேட்டறியலாம் என்று அறிவுறுத்தினார் கண்ணன். அனைவரும் அம்புப்படுக் கையில் கிடந்த பீஷ்மரைச் சந்தித்தார்கள். அப்போது, அவர்களுக்கு பீஷ்மர் போதித்த திருமாலின் ஆயிரம் திருநாமங்களே விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆகும்.