Saturday, June 18, 2022
Homeசினிமா செய்திகள்vj chitra: விஜே சித்ரா, சஹானா இடையேயான இந்த ஒற்றுமையை கவனிச்சீங்களா? - similarities between...

vj chitra: விஜே சித்ரா, சஹானா இடையேயான இந்த ஒற்றுமையை கவனிச்சீங்களா? – similarities between vj chitra and sahana sajad

பல நகைக்கடை விளம்பரங்களில் நடித்த கேரளாவை சேர்ந்த சஹானா சஜத் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளரான Jolly Bastian இயக்கியிருக்கும் லாக்டவுன் தமிழ் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் சஹானா.

அந்த படம் ரிலீஸுக்கு தயாராகியிருக்கும் நேரத்தில் கேரளாவில் இருக்கும் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் சஹானா.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் சஜத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதை பார்த்த தமிழ் ரசிகர்களுக்கு விஜே சித்ராவின் நினைவு வந்துவிட்டது.

சித்ராவும் இப்படித் தானே ஹேமந்தை திருமணம் செய்து கஷ்டப்பட்டார். கோலிவுட்டில் ஹீரோயினாக வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர் நடித்த கால்ஸ் படம் ரிலீஸாவதற்கு முன்பே தற்கொலை செய்து கொண்டார்.

சித்ரா வழக்கை போன்றே சஹானா வழக்கிலும் கணவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சித்ராவின் பெற்றோரை போன்றே சஹானாவின் பெற்றோரும் இது தற்கொலை அல்ல கொலை என்று கதறுகிறார்கள்.
VJ Chitra:சித்ரா உயிரோட வந்துட்டாரா!: ‘அந்த’ வீடியோவால் ஆடிப் போன ரசிகர்கள்சஹானாவின் கணவரை விசாரித்தால் உண்மை வெளியே வரும் என்கிறார்கள் அவரின் பெற்றோர். ஹேமந்த் தான் தங்கள் மகளை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுவிட்டதாக சித்ராவின் பெற்றோர் தெரிவித்தனர்.

இன்னும் எத்தனை சித்ரா, சஹானாக்கள் இப்படி தூக்கு போட்டு தற்கொலை செய்யப் போகிறார்களோ. இந்த கொடுமைக்கு ஒரு முடிவே இல்லையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments